பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் ©oo கவியரசர் முடியரசன் வாழ்க்கையினை ஆறென்றால், நெறிப்படுத்தும் 为气 வரம்பாகும் இருகரையாம் இன்ப துன்பம் வாழ்க்கையினைச்சகடென்றால் இயங்கச் செய்யும் வட்டமெனும் ஈருருளை அவ்வி ரண்டாம்; வாழ்க்கையினை நாளென்றால் முழுமை செய்ய வருபகலும் இரவுமென அவற்றைச் சொல்வோம் வாழ்க்கையினில் இவ்விரண்டும் உண்டென் றெண்ணி வகைதெரிந்து நடப்பவர்க்கே இன்பந் தோன்றும். ஏர்நடத்தி விதைவிதைத்து, நாற்றுப் பாவி எருவிட்டுக் களையெடுத்து நாளும் நாளும், நீர்கொடுத்துக் காத்திருந்து பாடு பட்டேன் [ {{ நெடுந்துன்பம் உறக்கண்டான்; அதனால் இந்தப் பார்நடக்க உணவளித்து வள்ள லாகிப் பசிகளைந்து வாழ்கின்ற இன்பங் கண்டான் கூர்படைத்த அறிவாளர் பட்ட துன்பம் கொடுத்தவையே நாம்நுகரும் இன்ப மெல்லாம். குறுமலர்க்கண் சிறுமகனைக் கொஞ்சும் தாய்க்குக் கூடிவரும் இன்பத்திற் களவே இல்லை கருவுயிர்க்கும் போதவள்தான் அடையும் துன்பம் கணக்குண்டோ? பகலுக்கு வெம்மை என்றால் இரவினுக்குத் தண்மையன்றோ? உலகில் என்றும் இருகூறும் கலந்திருக்கும்; ஒன்றில் ஒன்றாம் உறுதுயிர்க்கு மறுபுறமே இன்ப மாகும் உற்றறிவார் தமக்கேஇவ் வுண்மை தோன்றும்.