பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் «101» கவியரசர்.முடியரசன் இன்பமெது வெனவுணர்ந்து தெளிந்து சொல்ல எவராலும் இயலாது போதும் போதும் என்பதிலே காண்கின்றான் ஒருவன் இன்பம் , எனைத்துநிதி பெற்றாலும் போதா தென்றே தன்பெருவாய் திறந்தலைந்து பொருளைத் தேடித் தவிப்பதிலே மற்றொருவன் இன்பங் காண்பான்) மன்பதையின் மனத்தளவே ஆகும் அல்லாள் மதிப்பிட்டுச் சொல்லுதற்கோர் வகையே இல்லை. நி ஒருவனுக்குங் கின்பமெனத் தோன்றும் ஒன்றே உறுதுன்ப மெனத்தோன்றும் மற்ற வர்க்கே ஒருநிலத்தில் இன்பமெனக் கொண்ட ஒன்றை ஒதுக்கிடுவர் மறுபுலத்தில் துன்பம் என்றே; பெருவிருப்பால் இஃதொன்றே இன்பமென்பார் பிழையென்று மற்றொருவர் பிறிது சொல்வார்; ஒருவருக்கும் புரியாத பொருளே யாகி உலகிலது சுழன்றுவரக் கானு கின்றோம். தீப்பிழம்பின் உருண்டைஎனக் கிளர்ந்தெழுந்து 片一 திரைகடலில் முகங்காட்டுங் கதிரோன், மாற்றார் நாப்பொழிந்த இகழ்வுரையால் சினந்தெ ழுந்து நண்ணாரைப் புறங்கண்ட போர்க்காம்போல் #十人 மீப்படர்ந்த மேற்றிசையின் செக்கர் வானம், மெல்லியலார் முகம்போலப் பொலிந்து விண்மீன் நாப்பண்வரும் வெண்மதியம், அதைத் தொடர்ந்து நண்ணிவரும் முகிலினங்கள் காட்சி யின்பம்.