பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் 232ك கவியரசர் முடியரசன் வறுமையெனும் உலைக்களத்தில் அடுக்கி வைத்த மதம்சாதி பட்டினிநோய் மூடம் என்ற கரிகளிலே உணர்ச்சியினை மூட்ட வீசும் காற்றெனவே பெரும்புரட்சி தோன்ற, அங்கே உரிமையெனும் போராட்டச் செந்தீ பற்றும்; --- *உறிஞ்சிவரும் இரும்புகளை அதனிற் காய்ச்சிச் சரிவுபடாப் பொதுவுடைமைச் சட்டம் என்ற சம்மட்டி யாலடித்தால் உருவ மாகும். போராடும் உலகத்தைச் சாய்க்க வேண்டின் புதியதோர் உலகத்தைப் படைத்தல் வேண்டும்; நீரோடு நிலம் நெருப்பு வானம் காற்று நிறைபொருள்கள் தனியுடைமை ஒருவர்க் கென்றால் வேரோடு சாய்க்கின்ற துணிவு வேண்டும்; விளையாட்டுப் பேச்சாலே பயனே இல்லை; யாரோடும் பகைவேண்டாம்; ஒன்று பட்டால் யாவுமிங்குப் பொதுவாகும் புதுமை பூக்கும்

  • உறிஞ்சி வரும் இரும்புகள் - பிறருழைப்பை உறிஞ்சும் இரும்பு போலும் மனமுடையார்.