பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் S47- கவியரசர் முடியரசன் பாராளும் காவலர்க்கும் பாட்டாளும் பாவலர்க்கும் ஏராளும் காராளன் செய்யுதவி ஏராளம்; சாவா மருந்தெனினும் தன்பால் இயைந்துவிடின் ஆ ஆ இனிதென் றவனே தனித்துண்ணான் மற்றோர் வெறுத்தாலும் மாறி அவரிடத்துச் சற்றும் முனிபுகொளான் தாவி அணைத்திருப்பான்; நெஞ்சில் உரமும் நெடுந்தோளில் வல்லமையும் விஞ்சும் இயல்புடையான் துஞ்சுதலைத் தான்விழையான்; அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்; தக்கும் புகழென்றால் தாவி அதுபெறவே பொக்கை உயிர்போக்கி பொன்றாது நின்றிருப்பான் | خان சூழும் பழியென்றால் தாவென் றுமிழ்ந்தொதுக்கி ஆழி உலகம் அதுபெறினும் தான்வேண்டான்; தன்னலம் ஒன்றைத் தவிர்த்திடுவான் மற்றவர் தந்நலம் வேண்டித் தனிமுயற்சி மேற்கொள்வான் யாதுமென் ஊரென்பான் யாவரும் கேளிரென்பான் தீதறியான் சூதறியான் சாதலும் கண்டஞ்சான் தன்னிற் பெரியோரைத் தான்வியந்து நின்றாலும் தன்னிற் சிறியோரைச் சற்றும் இகழ்ந்தறியான்; வாழ்வில் வருமானம் வாய்ப்பின் அதுவேண்டான் *சாவில் வருமானம் ஒன்றே சரியென்பான்; ஒன்றே குலமென்றான் தேவன் ஒருவனென்றான் நன்றே இறையுணர்வை நாட்டிற் குணர்த்திவந்தான்

  • சாவில் வருமானம்-இறந்தால் மானம் வரும்.