பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் χ/ கவியரசர் முடியரசன் வாழ்ந்த தமிழினத்தின் வாய்த்த வரலாறு சூழ்ந்து சொலக்கருதின் சொல்லில் அடங்காது; நாகரிகத் தொட்டில் நமது திருநாடு வாகுடனே வாழ்ந்த வரலாறிதுவாகும்; வாழ்ந்த வரலாற்றில் வந்த சிலசொன்னேன் வீழ்ந்த வரலாறு விண்டால் மனம்நோகும்; முச்சங்கம் கண்டு மொழிவளர்த்தோன் எப்பகையின் அச்சங்க ளின்றி அமைதியில் நூல்படைத்தோன் ஆங்கிலத்தால் ஆரியத்தால் ஆதிக்க இந்தியினால் தீங்குவரு மோவென்று திண்டாடி நிற்கின்றான் பண்படுத்தும் நூல்கள் பலதந்தோன் சான்றோரைப் புண்படுத்தி மன்பதையின் பண்பழிக்கும் ஏடுகளே இன்றுகுவிக் கின்றான்; இளையோர் உணர்வுகளைக் கொன்று கெiடுத்துவிட்டுக் கூசாமல் பேசுகின்றான்; காசுக்கும் மாசுக்கும் கண்ட படிஎழுதும்; ஆசைக்குட் பட்டே அலைகின்றான் பாவிமகன்; நல்ல அரசியலில் நஞ்சைக் கலந்துவிட்டான்; சொல்லும் மொழியெல்லாம் சூதன்றி வேறில்லை; சூதாட் டரசியலில் சொக்கித் திரிபவரைச் சூதாட்டக் காயாக்கிச் சொக்கட்டான் ஆடுகிறான்; பண்பாட் டரசியலைப் பாழடித்துச் சாகடித்துத் தன்பாட்டில் மட்டும் தனியார்வம் காட்டுகிறான்; கண்டுமுதல் காணும் களமாக்கி அச்செயலைத் தொண்டென்றும் சொல்லித் தொலைக்கின்றான் மக்களிடம்; நோக்குந் துறைதோறும் நோய்செய்யும் போலிகளே தரக்கித் தலைநிமிர்த்தித் தோளுயர்த்திச் செல்கின்றார்.