பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் கவியரசர் முடியரசன் ஏட்டில் படித்தேன் இலக்கணப் போலியென நாட்டிலும் போலிகள் நன்கு பெருகிவிட்டார்; மானம் மறந்தான் மனத்தைத் துறந்துவிட்டான் போனது போகப் பொருள்வந்தாற் போதுமென்றான்; ஒட்டும் வயிற்றில் உடுத்த உடையில்லை கட்டும் தறியில்தான் காலமெல் லாங்கிடப்பான்; சிக்கல் எடுப்பான் சீர்செய்வான் பாநூலைச் சிக்கலுக்குள் சிக்கி இவன்மட்டும் சீரழிவான்; பாவறுந்த நூலைப் பதப்படுத்தி ஒட்டிவைப்பான் வாழ்வறுந்து போனால் வழியின்றித் தான்.தவிப்பான் நூற்றுக் கணக்கிலவன் நூற்றுக் கொடுத்தாலும் சோற்றுப் பருக்கைக்கு நோற்றுக் கிடப்பான்; நாட்டுப் பசிபோக்க நாற்றை நடுகின்றான் #: / வீட்டுப் பசிநீக்க வேளாண் சாகின்றான். ് பல்லுயிரும் வாழப் பகுத்துண்டான் முன்னாளில் பல்லுயிரும் வாடப் பறித்துண்யான் இந்நாளில்; கூம்பிக் கிடக்கும் குடும்ப நிலைகண்டும் சோம்பிக் கிடந்தே சுகங்கண்டு வாழ்கின்றான்; பாவம் பழியென்று பாரான் தனது மனம் தாவும் செயலொன்றே தக்க தெனப்புரிவான்; சின்ன நலமொன்றுசேரும் எனத்தெரிந்தால் என்ன பெரும்பழியும் ஏற்கத் தயக்கமிலான்; எல்லாம் பொதுவென்பான் என்பொருள்கள் மற்றவர்க்கு அல்ல இனியென்பான் ஆராத பேராசை! வல்லான் கரண்டி வளர்வதன்றி மற்றொன்றும் கல்லான் கருதான் களத்தில் நடிக்கின்றான்.