பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய நாடு அயில்வேலும் உடைவாளும் உண்டான நாடு-இன்றுஅயலார்கள் அரசாளச் சரியோடும் நாடு s -அயில் வயல்யாவும் கயல்பாயும் புனல்சூழும் நாடு வயிறார உணவார இயலாத நாடு மயிலாடும் குயில்பாடும் வளமான நாடு மனம்நோகத் தெருவோரம் குடிவாழும் நாடு -அயில் தலையான நெறிகண்டு புகழோடு நின்றோர் தன்மானங் கெடும்போதும் உணராத நாடு தலைநாளில் மொழிமூன்று வகையாகி நின்றும் தமிழாலே இசைபாடத் தெரியாத நாடு -அயில் கதையாகக் கனவாக எதையேனும் சொல்வார் காணாத உலகாள வழியோதிச் செல்வார் பொதுவாகும் பொருள்யாவும் எனுமாறு நாடிப் புதுவாழ்வு நனவாக முயலாத நாடு -அயில்