பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியப் பேரரசு அணிந்திருக்கும் பூணுரல்கள் நூல்க ளல்ல ஆரியத்துப் பேரரசின் எல்லைக் கோடு; தணிந்துரைக்கும் அவர்மொழிகள் அணுவின் குண்டு; தருப்பைப்புல் ஏவுகணை நெற்றி யின்மேல் அணிந்திருக்குந் திருநீறோ இடுக்கித் தாக்கும் ஆயுதங்கள் திருநாமம் கழும ரங்கள்; நினைந்தெடுத்து விழிப்பாகக் கட்டி வைத்த நெடியமதிற் கோட்டைகளாம் நான்கு வேதம் ஆலயங்கள் அவ்வரசு செங்கோ லோச்சும் அரண்மனையாம்; சிலைகள்வெளி நாட்டுத் தூதர்; நாலுவகை வருணங்கள் பகைமு டிக்கும் நாற்படையாம்; பஞ்சாங்கம் சட்ட நரலாம்; மேலுலகம் புராணங்கள் சாத்தி ரங்கள் . மேற்படியார் விளம்பரஞ்செய் துறைக ளாகும்; மாலுடைய மதம்.நடன மங்கை யாகும்; மற்றுமுச்சிக் குடுமியொரு கொடியே யாகும்.