பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் Q54D கவியரசர் முடியரசன் ஆலமரம் அரசமரம் இவற்றின் கீழே அமர்சிலைகள் சிற்றரசாம்; உடைக்குந் தேங்காய் பாலொடுநெய் ஊர்மக்கள் கப்ப மாகும்; பறை யோசை மந்திரங்கள் அரசின் ஆணை: மேலுலகம் கீழுலகம் சிறைத்ாகும்: 关 மேதைகள்போல் எழுதிவிருஞ் செய்தித் தாள்கள் வேலொடுவாட் படைகளாகும்; காஞ்சிப் பீடம் வெற்றிபெற மறைசூழும் மன்ற மாகும். பகுத்துணரும் ஆற்றலிலார் மயக்கங் கொண்ட பத்தியின்ால் தம்மைத்தாம் அறிய கில்லார் தொகுத்திருக்கும் மடமைக்குள் மூழ்கி நிற்பார் தொழும்பரிவர் குடிமக்கள் ; மனுநூ லாளர் வ்குத்திருக்கும் பிறப்பிறப்பு வரிக ளோடு மன்றல்வரி குடிமக்கள் செலுத்தி நிற்பர்; பகைத்தெவரும் எழுவரெனில் அழகு மிக்க பராசத்தி ஏவிடுவர் பகையும் வீழும். வஞ்சனையின் வலைவிரிக்கும்;அறிவு தேய்ந்த வாயில்லா அரிகளெல்லாம் வந்து வீழும்: நஞ்சனைய தந்திரத்தால் மயக்கு கின்ற நாத்திறத்தால் ஏமாற்றி ஆட்சி செய்யும் பஞ்சணைந்த அரியணையில் ஏறி நின்று பாமரரைப் பொம்மையென ஆட்டி வைக்கும்: துஞ்சுழன முடரிங்கு வாழும் மட்டும் தோற்காது வெற்றிபெறும்ஆரி யந்தான். o (30.3.1984)

  • - I -

o