பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றுமையும் ஒருமையும் ஒற்றுமை எனவும் ஒருமை எனவும் சொற்றிடும் இருசொலைச் சற்றிவண் நோக்குதும் வேறுபடு பொருள்களைக் கூறிடும் அவற்றுள் சாரும் பொருண்மை தேறுதல் நம்கடன் ஒன்றுடன் மற்றொன் றிணைவதே ஒற்றுமை ஒன்றினுள் ஒன்று மறைவதே ஒருமை; இணைந்தும் தனித்தும் இயங்குவ தொற்றுமை அணைந்தபின் ஒன்றாய் அமைவதே ஒருமை; மலைப்பினி வேண்டா மனத்தினிற் பொருந்த இலக்கணச் சொல்லால் விளக்குதும் கேண்மின்; பலபல எனுஞ்சொல் பகுக்கவும் இயலும் கலகல எனுஞ்சொல் கலந்தே நிற்கும்; முன்னதை அடுக்குத் தொடரென மொழிவர் பின்னதை இரட்டைக் கிளவியென் றியம்புவர்; அடுக்குத் தொடரென ஆகுவ தொற்றுமை இரட்டைக் கிளவியென் றிருப்பதே ஒருமை; இடர்ப்படல் தவிர்த்தினி இருவகைப் பொருளும் மனத்தினில் தெளிகதும் மயக்கமும் விடுத்தே. (1.1.1977)

  1. ಪಪ - தெளிதல்.