பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றுமை உருப்படுமா? வளமனை பலவும் வருபொருட் டொகையும் உளநல் முதியோன் ஒருவன்; அவற்குக் கற்றறி மக்கள் காளையர் நால்வர் உற்றனர் மணம்பெறத் தக்கநற் பருவம்; மகட்கொடை வேண்டி மருகும் நாளில் நகத்தகும் நண்பன் நவின்றனன் சிலசொல்; 'நால்வரும் தனித்தனி நங்கையர் மணப்பின் பாழ்படும் ஒற்றுமை, பழுதுறும் அமைதி: வருத்தமும் குழப்பமும் சூழும்: ഔ/ ஒருத்தியைக் கொணரின் ஒற்றுண்ம வாழும்; பெண்டிர் நால்வர் சண்டைகள் இடுவர் மண்டைகள் உடைபடும் அண்டையர் நகைப்பர் பலமொழி பேசும் பலப்பல மாநிலம் நலமுற ஒற்றுமை நிலவுறச் சான்றோர் ஒருமொழி கொணர்தலை உற்று நோக்குதி! அறிவிலாச் செயலா அவரெலாம் செய்வர்? அதனால் நீயும் அரிவை ஒருத்தியை மதலை நால்வர்க்கும் மணமுடிப் பாயே! (2.7.1979)