பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றம் பெறுமா இந்தியா? தீண்டுதல் குற்றம்,தெருவிடை நடக்க வேண்டுதல் குற்றம்; விழியாற் பார்ப்பது மிக்ப்பெருங் குற்றம்; மிதியடி யணிந்து நடப்பது குற்றம்; நாயினுங் கீழா இந்திய நாட்டில் இப்படி ஒரினம் சொந்த நாட்டில்நொந்து தவித்தது; அடிமைப் புழுவெனப் படிமிசைக் கிடந்தது; மிடிமையிற் பட்டது வேதனை யுற்றது; சிந்தனை மாந்தர் நொந்தன ராகி இந்த நிலை ஏன் ?என்றனர் ஏங்கி "அவரவர் தலைவிதி ஆண்டவன் படைப்பிது" 'தவறில் சாத்திரம் தந்த நெறி"யென ஒதினர் இறைவன் தூதுவர் என்போர்; 〈 தூதரைத் துரத்துW தொழுத்தகும் இறைவன் \ மேதினி மாந்தரை மேலெனக் கீழெனப் படைத்தனன் ஆகின் உடைத்தெறி அவனை;