பக்கம்:புதிய கோணம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைப் பண்பு 113

“குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளாதவர்’ (குறள்-66)

“மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று” (5D61–fis2)

என்ற குறள்களின் ஒசை நயம் வாய்விட்டு உரக்கப் படித்தால்தான் நன்கு விளங்கும்.

படிக்கும்பொழுது செவிக்கு இன்பம் ஊட்டுவது தவிர, இக்கவிதைகளில் கண்ட ஒசை நயம் செய்யும் தொழில் வேறு . ஆனால் மற்றும் சில கவிதைகளில் ஒசை பொருளையே அறிவித்தலும் உண்டு. உலகத்தின் பற்றுக்கள் மனிதனை வலுவாகப் பற்றியுள்ளன. அவற்றிலிருந்து விடுதலை அடைய வேண்டுமாயின் ஒரே வழிதான் உண்டு. மனித மனமோ ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் நிற்குமே தவிரச் சும்மா இருப்பதில்லை. எனவே உலகப்பற்றை மனம் விடவேண்டுமாயின் கடவுட் பற்றைப் பிடித்துக்கொள்ள வேண்டும்; இல்லையேல் இப்பற்றை விடஇயலாது. கடவுட்பற்றையும் அரை குறையாகப் பற்றிக்கொண்டால் பயன் இல்லை. விடாப்பிடியாக, அழுத்தமாகக் கடவுட்பற்றைப் பிடித்தவர்கள் உலகப்பற்றை விடமுடியும். இத்துணை துரம் கூறியதையும் கவிஞன் ஏழு சீர்களில் கூறவேண்டும். ஆகவே ஓசையைத் துணைக்கு அழைக்கிறார்; : -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/121&oldid=659824" இலிருந்து மீள்விக்கப்பட்டது