பக்கம்:புதிய கோணம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 புதிய கோணம்

செய்தனர். அத்தகைய ஒரு பொற்காலம் உலக வரலாற்றில் வேறு எந்த நாட்டிலும் அல்லது இந்த நாட்டின் பிற பகுதியிலும் காண்டல் அரிதாகும்.

ஆனால், இந்த நாட்டிலேயே தோன்றி வளர்ந்த சைவம், வைணவம் என்ற இரண்டு சமயங்களின் பக்திக் கொள்கையில், பிற நாட்டுச் சமயக் கொள்கையில் இல்லாத ஒரு வேறுபாடு இருத்தலைக் காண்டல் கூடும். பக்தி என்றால் ஏதோ காடுகள் சென்று கனசடை வைத்து, மூக்கைப் பிடித்து, உடம்பை உருக்கி, உயிரை வாட்ட வேண்டுமென்ற கருத்தை இந்நாட்டுப் பெரியவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. அதன் எதிராக எல்லாவித சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டே பக்தி செய்ய முடியும் என்ற பேருண்மையை அறிவித்தனர். அதனால்தான் போலும் ஆண்டியாக இருந்தும், அரசனாக இருந்தும், இல்லறத்தில் இருந்தும், வாணிகம் புரிந்தும், எந்த நிலையில் இருந்தும் பக்தி செய்ய முடியும் என்பதை அறிவுறுத்தினார்கள். உலகம் தவறானது என்று சொல்லக்கூடிய கொள்ளைத் தொழிலோ அன்றி சூதுத் தொழிலோ கூடத் தம்மை மறந்த நிலையில் ஒரு குறிக்கோளுக்காக ஒருவரால் செய்யப்படின் அதனையுங்கூட இந்த நாட்டவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பக்தி நிலையில் நின்று குகன் படைத்த மீன் உணவைச் சக்கரவர்த்தி திருக்குமாரன் ஆகிய இராமன், “பரிவினில் தழீஇய என்னின் பவித்திரம் (கம்பன்: 1967) என்று கூறியதுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/146&oldid=659851" இலிருந்து மீள்விக்கப்பட்டது