பக்கம்:புதிய கோணம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 புதிய கோணம்

உலகப் படைப்பிலேயே மனிதன்தான் உயர்ந்தவன் என்பதை இப்புதுமை விருப்பர்களுங்கூட மறுப்பதில்லை. அவ்வாறாயின், மனிதன் எதனால் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்? ஏனைய விலங்குகளையும் அவனையும் வேறு பிரித்துக் காட்ட உதவுவது எது? மனிதன் பெற்றுள்ள மனம் என்ற ஒன்று தானே? இந்த மனத்தின் அடிப்படையில் தோன்றும் எண்ணங்களும் குறிக்கோள்களும் தாம் அவனை வேறு பிரித்து உயர்ந்தவனாக ஆக்குகின்றன. இந்த மனத்தில் தோன்றும் எண்ணத்தின் உயர்ந்த குறிக்கோளாக அமைவது கடவுள் பற்றிய நினைவு. எனவே, அவனுடைய சாதாரண வாழ்வு முழுவதையும் வெளியிடக் காதலும், மணவாழ்வு முழுவதையும் வெளியிடக் கடவுளும் பயன் படுகின்றன.

ஓர் இனத்தின் வாழ்வை எவ்வாறு அறிகின்றோம்? நம் காலத்தில் வாழ்பவர்களாக இருப்பின் அவர்களை நேரே கண்டு பழகி, அவர்கள் உணவு, உடை முதலியவற்றைக்கொண்டு ஓரளவு ஆராயலாம். ஆனால் அவ்வாறு செய்வதானாலும் அந்த இனத்தார் முழுவதையும் கண்டு பேசிச் செய்தல் என்பது இயலாத காரியம். அவருள் சிறந்தவர் என்று மதிக்கப்படுபவர் சிலரைப் பற்றி ஆய்வதன் மூலமே ஒரு முடிவுக்கு வருதல் கூடும். பல காலம் முன்னர் வாழ்ந்த ஒர் இனத்தைப்பற்றி அறிய வேண்டுமாயின் வழி யாது? அந்த இனத்தைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/150&oldid=659856" இலிருந்து மீள்விக்கப்பட்டது