பக்கம்:புதிய கோணம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 புதிய கோணம்

நிறுத்திவிட முடியாது. இப்படி அச்சம் அச்சம் என்பதனாலே வாழ்க்கையே இருண்டு விடுகிறது.

தனி மனிதர்களுடைய அச்சம், குடும்பத்தைப் பற்றிய அச்சம், சமுதாயத்தைப் பற்றிய அச்சத்தின் காரணமாக இன்று சாமியார்களும், குருமார்களும் நூற்றுக்கணக்கில் தோன்றிவிட்டார்கள். நம்முடைய அச்சம்தான் அவர்களுக்கு மூலதனமாக இருக்கிறது. இந்த அச்சத்தை அடிப்படையாக வைத்து அவர்கள் தொழில் நடத்துகிறார்கள்.

ஒரளவு சிந்திப்போமேயானால் இறையுணர்வு என்ற ஒன்று இருக்குமேயானால், உறுதிப்பாடு நெஞ்சில் வந்தே தீரும். நாம் இறைவனுடைய கருணையின் கீழ் இருக்கின்றோம், அவனுடைய கருணை நம்மை என்றும் காப்பாற்றும் என்ற உறுதிப்பாடு இருக்குமேயானால் அஞ்சுவதற்குக் காரணமே இல்லை. ஆக

“.............. கெடிலப் புனலும்

உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை’

- (திருமுறை: 4, 2, 1)

என்று சொல்கிறார் திருநாவுக்கரசர்

இந்த அச்சத்தைப் போக்குவதுதான் இன்று நாம் இன்றியமையாமல் கடைப்பிடிக்க வேண்டிய மிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/164&oldid=659871" இலிருந்து மீள்விக்கப்பட்டது