பக்கம்:புதிய கோணம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் கண்ட விஞ்ஞானம் 161

பிடிமானமற்றுத் தொங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு உடையது இம் மண்ணுலகம் என்று பாடுகிறான். ஆகாயத்தைப்பற்றிக் கூற வந்த புலவன் நிலன் ஏந்திய விசும்பு’ என்று பேசுகிறான். அதாவது பெரு வெளியில் எவ்விதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்திலே தொங்குகின்ற சிறப்பைப் பூமியின் சிறப்பாகக் கூறாமல் விசும்பின் சிறப்பாகக் கவிஞன் பேசுகிறான். இந் நிலத்தைத் தன்மாட்டு ஏந்திக் கொண்டிருக்கின்ற விசும்பும் என்று கருத்தோடு மட்டும் அமையாமல் இவ் விஞ்ஞானப் புலவன் இன்னும் ஒரு படி மேலே செல்லுகின்றான்.

பூமியின் மேலேயுள்ள வளி மண்டலத்தைகாற்று மண்டலத்தை-இன்றைய அறிவு உலகம் நன்கு ஆராய்ந்து இம் மண்ணுலகம் இவ்வளி மண்டலத்தால் சூழப்பெற்றிருக்கிறது என்றும், மேலே செல்லச் செல்ல அதனுடைய அழுத்தம் குறைந்து கொண்டே செல்லுகிறது என்றும், ஒரு குறிப்பிட்ட உயரம் சென்ற பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒன்றும் இல்லாமல் இக்காற்று மண்டலம் அழிந்து விடுகிறது என்றும் பேசுகிறது. இன்றைய அறிவியல் பேசும் இத் தத்துவத்தை விசும்பு தைவரு வளியும் என்று புலவர் பேசுகின்றார். அதாவது பூமி யின் மேலுள்ள இக்காற்று மண்டலம் ஆகாயத்தை ஓயாது தடவிக் கொண்டேயிருக்கிறது. அதாவது தை வருகின்றது” என்று பேசுகின்றார். தைவருதல்’ என்ற சொல்லுக்கு தடவிக் கொடுத்தல் என்பது பொருளாகும். தடவிக் கொடுத்தல் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/169&oldid=659876" இலிருந்து மீள்விக்கப்பட்டது