பக்கம்:புதிய கோணம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. குமரகுருபரர் தமிழைப் பாடியது ஏன்?

பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சேக்கிழார் பெருமான் பாடிய திருத்தொண்டர் புராணத்திற்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டு வரைத் தமிழ் மொழியில் மாபெரும் இலக்கியம் என்று கூறத் தக்க பெருநூல் எதுவும் தோன்றவில்லை. இந்த எட்டு நூற்றாண்டுகளிலும் தமிழ்மொழி வளர்ச்சி அடைய வில்லை என்றுதான் கூறல் வேண்டும்.

இந்தப் பொதுக் கருத்துக்கு எதிராக எம்மிலும் உளன் ஒரு பொருநன்’ என்று கூறத்தக்க முறையில் தோன்றிய பெரும் புலவரைப் பற்றிக் குறிப்பிடல் வேண்டும். இவர் 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய தவமுனிவராம் குமரகுருபரர். மேலே கூறப் பெற்ற பொதுக் கருத்துக்குப் புறனடையாக உள்ளவர். இவரிடம் காணப்பெறும் ஒரு புதுமையை ஆய்வதே இக்கட்டுரையின் கருத்தாகும்.

சங்கப் பாடல்கள் தொடங்கி, ‘ இருபதாம் நூற்றாண்டு வரை உள்ள தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து நோக்கினால் ஒரு தனித் தன்மையைக் காணாமல் இருக்க முடியாது. இத் தமிழர் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/183&oldid=659892" இலிருந்து மீள்விக்கப்பட்டது