பக்கம்:புதிய கோணம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 புதிய கோணம்

மொழியாகிய தமிழின் மாட்டுக் கொண்டிருந்த ஆராக்காதலை இவ்விலக்கியங்கள் காட்டி நிற்பதை நன்கு அறிய முடியும். உலகின் வேறு எந்த மொழியில் தோன்றிய இலக்கியங்களும் தம் மொழியை இத்துணை ஆர்வத்தோடு குறிப்பிட்டுப் பேசுவதில்லை. இதுவே ஒருபுதுமைதான். என்றாலும் இத்தமிழரின் ஆற்றொழுக்குப் போன்ற வாழ்க்கையில் அவ்வப்பொழுது சிலசில தடைகள், எதிர்ப்புக்கள் தோன்றியதை வரலாறு அறிந்தவர்கள் நன்கு அறிய முடியும். சாதாரண முறையில் போகிற போக்கில் தம் தமிழ்ப்பற்றை வெளியிட்டுச் செல்லும் தமிழ்க் கவிஞர்கள் சிற்சில சமயங்களில் வீறுகொண்டு எழுந்து தமிழின் சிறப்பையும் அதன் தெய்வத் தன்மையையும் விடாமல் அடிக்கடி கூறிச் செல்வதைக் காணமுடிகிறது. இவ்வாறு எந்தக் கவிஞரேனும் கூறியிருப்பின் அந்த இடத்தில் நின்று நிலைத்துத் தமிழக வரலாற்றைக் காண முற்பட வேண்டும். இவ்வாறு செய்வது பெரும் பயன் விளைப்பதுடன் ஏன் இக் குறிப்பிட்ட புலவர்கள் மட்டும் தமிழை இவ்வளவு தூரம் உயர்த்திப் L}fTL _ வேண்டும் என்பதன் உட்பொருளையும் அறிந்து கொள்ள உதவும்.

தமிழ் நாட்டில் தமிழராகப் பிறந்த ஒரு புலவர் தமிழ்க் கவிதைகளைத் தமிழருக்காகப் பாடும் பொழுது ஏன் அந்த மொழியின் சிறப்பை- இவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/184&oldid=659893" இலிருந்து மீள்விக்கப்பட்டது