பக்கம்:புதிய கோணம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரகுருபரர் தமிழைப் பாடியது ஏன்? 185

இவற்றுடன் நில்லாமல் அம்மை மீனாட்சியாகவும் ஐயன் செளந்திரபாண்டியனாகவும் முருகப் பெருமான் உக்கிர குமார பாண்டியனாகவும் மதுரையில் ஏன் வந்தனர் என்பதற்குக் காரணம் கூறத் தொடங்கி,

‘தமிழ் மதுரம் கட்டுண எழுந்த GaLLT6 இக் கொழிதமிழ்ப் பெருமை யார் அறிவார் எனில்’

(மதுரை: கல: 196)

என்று மதுரைக் கலம்பகத்தில் பேசுகிறார். மதுரை என்றதால்தான் இவ்வாறு பாடுகிறார் என்று நினையத் தேவை இல்லை. சோணாட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமாரனைப் பாடும் பிள்ளைத் தமிழிலும் கவிஞரின் உள்ளக் கிடக்கையைக் காணமுடிகின்றது. -

‘கொழி தமிழ் வேதபுரிக் குமரேசன் (386), ‘மும்மைத் தமிழ் சேர் கந்தபுரி (39), தமிழ் வேளுர் அடிகேள்!” (376), ‘சங்கத் தமிழின் தலைமைப் புலவா!’ (378), ‘தெளிதமிழ் பழகிய மதவலி (389), தென்கலைக்கு பழைய வட கலைக்கும் தலைவா (433), முத்தமிழ் பயில் பருதிப்பதி (437).

என்பன போன்ற தொடர்கள் அளப்பிலவாகும்.

முருகப் பெருமான் முதல் சங்கத்தில் இருந்து தமிழை ஆய்ந்தான் என்பதை, . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/193&oldid=659903" இலிருந்து மீள்விக்கப்பட்டது