பக்கம்:புதிய கோணம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி - சித்தன் 205

“தருவாய்நலமுந் தகவும் புகழுந் தவமுந் திறமுந் தனமுங் கனமும் ”

(பாரதி.கவி :2,1)

என்று கூறுவதுடன் அமையாமல், முடியா மறையின் முடிவாகிய முருகப்பெருமானை ஏன் இங்கு வரவேண்டுமென்று கேட்கிறான். மேலே அவன் கேட்டவற்றை முருகன் தந்துவிட்டால் போதாதா?

அவன் ஏன் வரவேண்டும்? என்ற வினாவை எழுப்பினால் உண்மை விளங்கும். காமாலை நோய்க்காரனுக்கு சர்க்கரைக்கூட கசக்கும். அது

போல, இங்கே உள்ள உயிர்களின் மனத்தில் அறுவகைக் குற்றம் என்பது நிறைந்து அடைத்துக் கொண்டிருப்பதால் அப்பெருமான் தருகின்ற நலம், தகவு போன்றவை உள்ளே துழைய முடியாது. எனவே, அவன் வடிவேலுடன் வந்தால் தான் இக்குப்பைகளைப் போக்கி நலம், தகவு முதலியவற்றை உள்ளே செலுத்த முடியும். இக்கருத்தையே,

“அடியார் பலரிங் குளரே அவரை விடுவித் தருள்வாய்’

(பாரதி, கவி: 2.1 )

அதற்கு நீ இங்கு வரவேண்டும் என்ற கருத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/213&oldid=659926" இலிருந்து மீள்விக்கப்பட்டது