உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கோணம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி - சித்தன் 211

அன்றொரு நாட் புதுவை நகர் தனிலே கீர்த்தி அடைக்கலஞ்சே ரீசுவரன் தர்மராஜா என்ற பெயர் வீதியிலோர் சிறிய வீட்டில், ராஜா ராமையனென்ற நாகைப் பார்ப்பான் முன்றனது பிதா தமிழி லுபநிடத்தை மொழி பெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி என்றனை வேண்டிக் கொள்ள, யான் சென்றாங்கண் இருக்கையிலே யங்கு வந்தான் குள்ளச்சாமி. அப்போது நான் குள்ளச்சாமி கையை அன்புடனே பற்றி யிது பேசலுற்றேன்: “அப்பனே, தேசிகனே, ஞானி யென்பார் அவனியிலே சிலர் நின்னைப் பித்தனென்பார்; செப்புறு நல் லஷ்டாங்க யோக சித்தி - சேர்ந்தவனென் றுனைப் புகழ்வார் சிலரென் முன்னே; ஒப்பனைகள் காட்டாம லுண்மை சொல்வாய், உத்தமனே, எனக்கு நினை உணர்த்துவாயே’ “யாவனி? நினக்குள்ள திறமை யென்னே? யாதுணர்வாய்? கந்தை சுற்றித் திரிவதென்னே? தேவனைப் போல் விழிப்பதென்னே? சிறியாரொடும் தெருவிலே நாய்களோடும் விளையாட்டென்னே? பாவனையிற் பித்தரைப் போலலை வதென்னே? பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே? ஆவலற்று நின்ற தென்னே? அறிந்த தெல்லாம், ஆரியனே, எனக் குணர்த்த வேண்டு’ மென்றேன்.

. (பாரதி-66)

இப்பாடற் பகுதியைப் பன்முறையும் படித்தால், இந்தச் சித்தன் பாரதிக்கு உபதேசம் செய்வதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/219&oldid=659932" இலிருந்து மீள்விக்கப்பட்டது