உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கோணம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராயப்பேட்டை முனிவர் 221

கூறு நல்லுலகம் அவரை நன்கு அறியும். திரு.வி.க. ΙΙ ΙΙΤΙή “

சமயத் தொண்டர், சமரச ஞானி, மகளிரின் சோதரர், தொழிற்சங்கத் தந்தை, இளைஞரின் தோழர், முதியோர் அன்பர், வகுப்பு வேற்றுமை, சாதிப்பூசல் கடந்த பெரு நோக்காளர். சாதாரண மாக ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு துறையில் சிறப்பு வருவதுண்டு; காரணம் அவர் அத்துறையில் பெருந் தொண்டாற்றி இருப்பார்; ஆனால் திரு.வி.க.வின் தொடர்பில்லாத இயக்கமே இல்லை, தமிழ்நாட்டில் சென்ற அரை நூற்றாண்டில். -

தமிழறிஞராகிய திருவிகவே முதன் முதலில் ஆங்கிலம் படித்தவர்கட்கும், தமிழ் மட்டும் கற்றவர் கட்கும் பாலம் அமைத்தார். அவர்கட்கு முன்னர், தமிழ் கற்றவர் அரசியலில் நுழைந்தததில்லை. ஆங்கிலம் கற்ற அரசியல்வாதிகள் தமிழ் கற்றவர் களைக் கண்டால் மதிப்புக் குறைவாகக் கருதி வந்த காலம் அது. அத்தகைய நிலையில் தமிழறிஞராகிய திரு.வி.க. அரசியலில் புகுந்தார். எத்தகைய அரசியல் பிரச்சினையையும் தழில் எழுத முடியும் என்பதை எடுத்துக் காட்டினார் எழுத்து மூலம். 40ஆண்டுகட்கு முன்னர் ‘சுதேசமித்திரன்’ போன்ற தமிழ்ச் செய்தித்தாள்களை எடுத்துப் பார்த்தால் உண்மை விளங்கும். நூற்றுக்கு ஐம்பது ஆங்கிலச் சொற்கள், எஞ்சிய ஐம்பதில் முப்பது வட சொற்கள், எஞ்சிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/229&oldid=659943" இலிருந்து மீள்விக்கப்பட்டது