பக்கம்:புதிய கோணம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 புதிய கோணம்

இருபதில் தமிழ் என்று ஒருவாறு கூறக் கூடிய சில சொற்கள், இந்நிலையிலிருந்த பத்திரிகைத் தமிழ் திருவி.க. என்னும் ரசவாதியின் கை பட்டவுடன் உயிருடைய தமிழாய் துடிப்புடன் உலவத் தலைப்பட்டது.

திரு.வி.க.வுக்கு முன்னர் மேடைத் தமிழ் வேறு, எழுத்துத் தமிழ் வேறாகவே இருந்தது. எத்துணை அழகாகப் பேசுபவர்களும் எழுத முன்வருவதில்லை. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் போன்றவர்கள் பெரும் பேச்சாளர்கள். ஆனால் அவர்கள் பேச்சுக் களை எழுதிப் பார்த்தால், நிலைப்பெற்ற, அறியப்பட வேண்டிய பொருள்கள் மிகுதியாக இரா. பேசும் பொழுது மக்களைக் கவரத்தக்க முறையில் பேசும் இவர்கள் பேச்சு, எழுத்தில் உயிரற்று இருத்தலை நன்கு அறியலாம். ஆனால் திரு.வி.க.வின் எழுத்திலும், பேச்சிலும் உயிர்த் துடிப்பு இருந்தது முற்றிலும் உண்மையே. அதைவிட வியப்பு என்ன எனில் அவருடைய பேச்சும் எழுத்தும் ஒரே மாதிரியாக இருந்ததேயாகும். அவருடன் நெருங்கி 25 ஆண்டுகள் பழகியதால் நான் கற்ற பாடங்கள் பலவாகும். எழுத்திற்கும் பேச்சுக்கும் வேறுபாடில்லாமல் எழுதியும் பேசியும் வந்த முதல் தமிழர் அவரேயாவார். இன்றைய தமிழ் நாட்டில் அவருடைய எழுத்து முறையைப் பின்பற்றி முன்னுக்கு வந்தவர்களில் சிறப்பாக ஒருவரைக் குறிப்பிடலாம். அவர் காலஞ்சென்ற ‘கல்கி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/230&oldid=659945" இலிருந்து மீள்விக்கப்பட்டது