பக்கம்:புதிய கோணம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 புதிய கோணம்

களிலும், “கார்ல் மார்க்சும் “கம்பரும் “ஞான சம்பந்தரும்’ ‘மால்துரசும்”, “லெனினும் “தாயு மானாரும்” வருவார்கள். இரண்டு வகை அன்பர் களும் இவற்றைக் கேட்டுப் பயனடைவர். சமரசம் என்றால் வேறுபட்ட சமயங்களில் மட்டும் அல்லாமல் உலகியல், வீட்டியல், சமய இயல் முதலியவற்றிலும் சமரசங்கண்ட பெரியார் அவர், வீட்டிற்குள் திருநீரும், வெளியே நாத்திகமும் பேசும் மக்கள் உண்டு தமிழ் நாட்டில், ஏன்? கூட்டம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு தம் கொள்கையை மாற்றிக் கொண்டு பேசும் பெரியோர்களும் உண்டு இத்தமிழ் நாட்டில். மந்திரிகட்காகக் கதர்ச் சட்டை போடுபவர் எத்துணைப் பேர்?

இத்தகைய “சமரசப் போலிகள்’ நிறைந்த தமிழ் நாட்டில் உண்மைச் சமரசவாதியாய் வாழ்ந்தார் திரு.வி.க. ஞானசம்பந்தரைப் பற்றிப் பேசிவிட்டுப் போவார் ஒருவர்; அடுத்தாற்போல் இராமசாமிப் பெரியார் வருவார். இவரை வந்து காண்பவர் ஆயிரம் கொள்கை வேறுபாடுடையவராய் இருப்பர். ஆனால் திரு.வி.க.விடம் எவ்வித ஆறுதலை அவர்கள் பெறுவார்களோ அறியோம். அத்துணைப் பேரும் வந்து பேசிவிட்டு மன அமைதியோடு திரும்புவர். திரு.வி.க.விடம் வருபவர்கள் கொள்கை ஆராய்ச்சி செய்யமட்டும் வருவதில்லை. கலப்பு மணம் செய்து கொள்ளமுடிவு செய்துள்ள இளைஞர் திரு.வி.கவைக் கண்டு பேசுவார். அவருடைய பக்குவம் அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/234&oldid=659950" இலிருந்து மீள்விக்கப்பட்டது