பக்கம்:புதிய கோணம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராயப்பேட்டை முனிவர் : 227

திரு.வி.க. அவரை ஆதரிப்பார். இன்ன முறையில் இதனை இவ்வாறு செய்ய வேண்டும் எனத் திரு.வி.க. கூறியவுடன் அவர் மிக்க மகிழ்ச்சியுடன் மீள்வார். அவர் போன சிறிது நேரத்திற்கெல்லாம் அவ் இளைஞரின் தந்தையார் வருவார். மகன் செய்யப் போகும் செயலைக் கடுங்கோபத்துடன் எடுத்துக் கூறித் தாம் இந்நிலையில் செய்யவேண்டியது யாது எனக் கேட்பார். அப்பெரியவர் மனம் அமைதி அடையும் வழிகளில் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்புவார், இராயப்பேட்டை முனிவர். வட துருவத்தில் நிற்கும் மகனும், தென் துருவத்தில் நிற்கும்

தந்தையும் ஒரு பொது இடத்தில் அமைதி அடைகிறார்கள் எனில் அது திரு.வி.க. அவர்களிடம் தான்.

சமய சமரசத்துடன் இத்தகைய கொள்கை, கருத்துச் சமரசங்களையும் கையாண்ட ஒருவர் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்தார் என்னில் அவர்தாம் இராயப்பேட்டை முனிவர். சமரச மனப்பான்மை இந்த அளவிற்குத் திருவி.க. விடம் வளர்வதற்குக் காரணம் யாது? அவர் உயிரினும் பெரிதாகப் போற்றிய நல்லொழுக்கமே எனலாம். இவ்வொழுக்கங் காரணமாக அவரிடம் சினம், வெறுப்பு, பொறாமை முதலிய தீக்குணங்கள் இல்லாதொழிந்தன.

பிறர் ஆக்கங்கண்டு பொறாமைப்படும் இயல்பு மனிதனிடம் என்றுமேயுள்ள தீக்குணம். மிகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/235&oldid=659951" இலிருந்து மீள்விக்கப்பட்டது