உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கோணம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 புதிய கோணம்

பெரியவர்களும் இதற்கு விலக்காமாறு இல்லை அதன் பயனாக இளைஞர் உலகிற்கும் முதியவர் உலகிற்கும் ஒரு பெரிய இடைவெளி இருந்து வந்தது. இத்தமிழ் நாட்டில். இவ்விடை வெளியின் பயன்தான் இன்று நாட்டில் காணப்பெறும் தீய சக்திகள். -

வாழ்வில் என்றுமே நன்மையை அறியாமல், தீயவற்றையே இளைஞர் உலகம் செய்கிறதென்று

உறுதியாக நம்பும் பெரியவர்கள், இளைஞர் உலகத்தையும் அதன் செயல்களையும் என்றுமே வெறுப்புடன் காணப் பழகி விட்டனர்.

இளைஞர்களும் இத்தவறு செய்யாமல் இல்லை. முதியவர்கள் அனைவரும், வாழ்வுக்குப் பயன் படாதவற்றையே செய்பவர்கள் என்றும், அவர்களால் சமுதாயத்திற்குத் தீமையே விளையும் என்றும் இளைஞர் சமுதாயம் கருதுகிறது. திருவி.க. அறுபது ஆண்டுகள் ஆன பிறகும் இளைஞராகவே இருந்தார். பழமையின் அனுபவமும் புதுமையின் சீர்திருத்தமும் அவரிடம் நிறைந்திருந்தன.

இளைஞர்களை ஊக்கி அவர்களை நல்வழிப் படுத்துவதில் திருவிகவை ஒத்த ஒருவர் இந் நூற்றாண்டில் இத்தமிழ்ச் சமுதாயத்தில் தோன்றின தில்லை. இப்பெரியாரால் உற்சாகம் ஊட்டப் பெற்ற பல இளைஞர்கள் சமுதாயத்தில் இன்று பொறுப்பு வாய்ந்த பதவி வகிக்கிறார்கள். இளைஞர் உலகை அஞ்சேல் என்று அபயம் தந்து, ஊக்கமளித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/236&oldid=659952" இலிருந்து மீள்விக்கப்பட்டது