பக்கம்:புதிய கோணம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 புதிய கோணம்

நம் நாட்டில் கட்டிடம், சிற்பம், ஒவியம், இசை, கவிதை என்ற இந்த ஐந்து நுண்கலைகளையும் வளர்க்க வேண்டுமென்ற கூக்குரல் மிகுதியும் கேட்கப்படுகிறது. ஒரு நாட்டின் நாகரிகத்தை அளப்பதற்கு அந்நாட்டில் தோன்றிய இந்நுண் கலைகளே சிறந்த அளவுகோல் என்றும் உலகம் பேசுகிறது. அந்த நாட்டு மக்களின் மனப்பாங்கை, நாகரிகத்தை, பண்பாட்டை, அறிந்துகொள்வதற்கு அவர்கள் படைத்த கலையே சிறந்த கருவியாக அமைகின்றது. இதில் யாரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. ஒரு நாட்டின் பண்பாட்டை வெளியிடும் கருவி கலையென்றால், அத்தகைய கலையை எப்பாடுபட்டேனும் காப்பாற்றவேண்டியது அந்த நாட்டு மக்களின் தலையாய கடமையாகும். இதிலும் கருத்து வேறுபாடு இருத்தற்கு இல்லை.

கலையைப் பற்றி நன்கு அறிந்தவர்களும், ah) என்றால் ஏதோ ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற அளவில் மட்டும் அறிந்தவர்களுங்கூட அதனை வளர்க்கவேண்டும், ஆதரிக்க வேண்டு மென்று இற்றைய நாளில் பேசுவதைக் கேட்கிறோம். எல்லா நாடுகளிலுமே இத்தகைய ஒர் விழிப்புணர்ச்சி தோன்றியிருப்பதை அறிகிறோம். பிற நாடுகளைப் பொறுத்தமட்டில் நிலைமை வேறு விதமாக இருப்பினும் நம் நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு சில உண்மைகளைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/242&oldid=659960" இலிருந்து மீள்விக்கப்பட்டது