பக்கம்:புதிய கோணம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 புதிய கோணம்

விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மாமேதைகள் ஆகிய அறிவியல் பெருமக்கள் கூட அவர்கள் மூளையில் உள்ள நியூரான்களின் 15 சதவிகிதத்தை தான் பயன்படுத்து கின்றனர் என்று கூறுகின்றனர்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மூளையின் இவ் அற்புத சக்தியை என்றோ நம் முன்னோர்கள் கண்டிருக்கின்றனர். இவற்றைப் பயன் கொள்ள வேண்டுமேயானால் மனம்தான் இதற்குச் செல்லும் வாயில் என்றும் கண்டனர்.

சினம் இறக்கக் கற்றாலும்

சித்தி எலாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே

(தாயு : பராபர, 169)

என்று தாயுமானவர் பேசுகிறார். இவ்வவதானத்தில் முதலிரண்டு அவதானங்களும், பழக்கத்தின் வாயிலாக நடைபெறுவனவே.

இலாடச் சங்கிலியைக் கோற்பதும், விடுவிப்பதும் விரல்களுக்குப் பயிற்சி தருவதன் மூலம் நடை பெறுவனவாகும். அதேபோல் ஓயாமல் வாயினால் சொல்லிக்கொள்ளும் “வேலும் மயிலும் துணை’ என்பன போன்ற தொடர்கள் வாய்ப்பழக்கத்தினால் வருபவை ஆகும். இவைதவிர அஷ்டாவதானத்தில் வருகின்ற எஞ்சிய ஆறும், தசாவதானம் ஆயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/250&oldid=659970" இலிருந்து மீள்விக்கப்பட்டது