உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கோணம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவதானக் கலை 245

அடுத்து அடுத்துத்தாவும் இயல்புடையது மனம் ஆகவே ஒருமுகப் படுத்தினால் மட்டும் போதாது; அது பயனையும் தாராது. ஒருமுகப் படுத்தப் பட்ட மனத்தை அதனிலேயே அக்குறிப்பிட்ட இடத்திலேயே நிலைபெறுமாறு செய்ய வேண்டும். அப்படி நிலைக்கச் செய்யும் முயற்சி ஒரு விநாடியில் ஒரு சிறு கூறாக இருந்தாலும் அவதானிகளுக்கு அதுவே போதுமானதாகும்.

மேலே கூறப்பெற்றபடி கணக்குப் போடுவது தவிர பாட்டின் ஈற்றடி தர முழுப்பாடல் கூறுவது. ஈற்றுச் சொல்களிலும் வெண்பா முழுமையாகச் சொல்வது என்பதனைப் பற்றிக் காணலாம். ஈற்றடி, ஈற்றுச்சீர் தரப்பெற்றவுடன் அவதானியின் நியூரான்கள் நாற்சீர், நாற்சீர், நாற்சீர், முச்சீர் என்ற முறையில் வெண்பாவின் வரை படத்தைத் தயாரித்து விடுகின்றன.

வெண்பாவின் ஏனைய சீர்களை அவதானியின் அகமணம் நிரப்ப முயல்கிறது. இப்பொழுது புறமனம் விடுதலை பெற்றுவிட்டது. காரணம் அவதானியிடம் ஈற்றடி, அன்றி ஈற்றுச் சீர் தவிர வேறு ஒன்றும் சொல்லப்படுவதில்லை. அவராகவே மற்றைய 12 அன்றி 14 சீர்களை நிரப்பிக் கூற வேண்டும்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஒலிக்கும் மணி எத்தனை முறை ஒலித்தது என்ற கணக்கு, எறிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/253&oldid=659974" இலிருந்து மீள்விக்கப்பட்டது