பக்கம்:புதிய கோணம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புதிய கோணம்

இது எவ்வாறு இயன்றது? துன்பத்தை அறியாமலும் காணாமலும் இருந்து விட்டால் துன்பத்தால் மகன் மனம் வேறுபட இயலாது என்று கருதிய மன்னன் மனக்கோட்டைகள் மங்கிவிட, வாழ்நாள் முழு வதையும் துன்ப ஆராய்ச்சியில் கழித்த மகன் வாழ்வு, எவ்வாறு எங்கே பரிணமித்தது? சாதாரண மனிதர்க்கும் பெரியோர்க்கும் வேறுபாடு இங்கேதான் தோன்றுகிறது. இவ்வுடம்புடன் வாழும் வாழ்வே அனைத்தும் என்று வாழ்பவர், சாதாரண மனிதர். உடம்புடன் இவ்வுலகில் வாழுங்காலத்திலேயே மனத்தால் பிறிதோர் வாழ்வு வாழ்பவர் பெரியோர் எனப்படுவர். உடல் கொண்டு வாழும் வாழ்வில் இன்பந்தவிர வேறு இல்லை என்பது உண்மை தான். ஆனால், இன்பம் என்று இங்குக் குறிக்கப்படுவது யாது? உடல் அனுபவிக்கும் நிகழ்ச்சிகளில் மனம் பங்கு பற்றும்பொழுதுதானே இன்பம் என்பது தோன்றக்கூடும்? மலர் மாலை அணிதல் இன்பம் என்று கூறுகிறோம். ஆனால், உறங்குபவன் மேலும், இறந்தவன் மேலும் மலர் மாலையைப் போட்டாலும், போடத் தகாத ஒரு பொருளைப் போட்டாலும் இரண்டும் ஒன்றுதானே? ஏன்? அவன் மனம் அதில் ஈடுபடவில்லையாயின் அதனால் தோன்றும் இன்ப துன்ப உணர்ச்சிகளும் தோன்றுவதில்லை.

உடல் வாழ்வு வேறாகவும், மணவாழ்வு வேறாகவும் வாழ்ந்துவரும் பெரியோர்களை நாம் அன்றாடம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/28&oldid=659988" இலிருந்து மீள்விக்கப்பட்டது