பக்கம்:புதிய கோணம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொப்பரைத் தேங்காய் 29

என்றும் தோன்றிய குறள்களும் இக் கருத்தை வலியுறுத்துகின்றன. துக்க நிவாரணம் என்ற தலைப்பில் ஆசையை அறவே ஒழித்தலே துக்கம் தொலைய வழி என்று கூறிய புத்ததேவன் கருத்தே

‘இன்பம் இடையறாது ஈண்டும் அவா (ஆசை)

என்னும் துன்பத்துள் துன்பங் கெடின் (குறள் 359)

என்ற குறளிலும் பேசப்படுவது கண்கூடு.

அவ்வாறு புத்தன் கூறியவற்றையே பிறருங் கூறி இருப்பவும் அவர்கட்கு இல்லாத சிறப்பு புத்தருக்கு மட்டும் யாண்டு வந்தது? இதற்கு விடையே முன்னர்க் கண்டோம். அப்பிறர் எல்லாம் இக்கருத்தைக் கண்டனர்; பிறர்க்கு எடுத்துக் கூறினர். ஆனால், தாம் தமக்கென ஒன்றையும் வேண்டாது நின்று கூறவில்லை. பிறர் துயரம் ஒழியும்வரை எனக்கும் வீடு வேண்டா என்று கூறி அதன்படி வாழ முற்படவில்லை. அரச குடும்பத்தில் அரசன் முதன் மகனாகப் பிறந்த ஒருவன் அற்ப ஆட்டுக்குட்டி ஒன்றைப் பெரிதென மதித்து அதனை வெட்டக் கூடாதென்றும், வெட்டுவதாயின் அதற்குப் பதிலாகத் தன்னுடைய தலையை வெட்டலாம் என்றும் கூறியவன் உண்டா? பிறர்க்கு அறம் முயலுதல் என்றால் வாயால் உபதேசஞ்செய்வது! மட்டும் போதாது. ஆட்டுக்குட்டிக்கு பதிலாகத் தவ உயிரை வழங்க முன்வருவதும், நாகர் உலகினும் உரகர் (நாகலோகம்) உலகினும் சென்று அவர்கள் வாழ்வைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் துயரம் போக்க முனைவதுமே பிறர்க்கு அறம் முயலுவதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/37&oldid=660000" இலிருந்து மீள்விக்கப்பட்டது