பக்கம்:புதிய கோணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 & புதிய கோணம்

ஆனாலும் ஆட்சி முறையில் பழகியவர்கட்குத்தாம் அதிலுள்ள இடையூறு நன்கு தெரியும். ஆளும் தலைவன் எத்துணைச் சிறந்தவனாயினும் அவனுடைய | குறிக்கோள் எத்துணைச் சிறந்த தாயினும் பயன் இல்லை; அதனைக் கொண்டு செலுத்துவோர் தக்கவராக இல்லாவிடத்து! இன்று நம்முடைய அரசியலார் செய்யும் பல நன்மைகளைப் பொது மக்கள் அனுபவிக்க முடியாமற் போய் விடுகிறது. காரணம் இடை நிற்போர்! எனவே, ஆள்வோருடைய குறிக்கோள் சிறந்ததாகவும் இருந்து, அது பயன்படவும் வேண்டுமாயின் ஒரே ஒரு வழிதான் உண்டு. அஃதாவது ஆள்வோர்கள் தக்கவர்களைத் தம்முடன் இருத்திக் கொள்ள வேண்டும். உடன் இருக்கும் அத் தக்கவர்களால்தாம் ஆட்சியாளர் குறிக்கோள் நற்பயன் விளைத்தல் கூடும்.

சோழன் நல்லுருத்திரன் என்பவன் நாடாளும் சோழர் குடியில் பிறந்த மன்னன். அரசாட்சியின் இந்த நுணுக்கத்தை அனுபவத்தில் கண்டான் போலும்; இதோ பேசுகிறான் அவன் குறிக்கோளைக் கொண்டு செலுத்த உதவும் நண்பர்கள் பற்றி.

“விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்

வல்சி கொண்டு)அளை மல்க வைக்கும் எலிமுயன்(று)அனைய ராகி உள்ளதம் வளன்வலி உறுக்கும் உளம்இ லாளரொடு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/52&oldid=660018" இலிருந்து மீள்விக்கப்பட்டது