பக்கம்:புதிய கோணம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 புதிய கோணம்

தோழிக்குப் பெருத்த சந்தேகந்தான். தலைவியினிடம் கேட்டுப் பார்க்கின்றாள். ஏதோ வேலையாக, எங்கோ போயிருந்ததாகத் தலைவி நொண்டிச் சமாதானம் சொல்லுகின்றாள். என்றாலும், தலைவியினிடத்து ஐயங்கொள்ளும் நிலை தோழிக்கு ஒன்றும் ஏற்படவில்லை.

நாட்கள் செல்லுகின்றன. தலைவியினுடைய நடை, உடை பாவனைகளில் ஓரளவு மாறுதலைக் காண்கின்றாள் தோழி. பாரதியார் சொன்னபடி “உணவு செல்லவில்லை; உறக்கங் கொள்ளவில்லை; படுக்கை நோகின்றது. வெளிப்படையான நோய் ஒன்றும் இல்லாமலேயே தலைவி இங்ஙனம் வாடுவதைக் கண்ட தோழி வியப்படைகின்றாள். மெல்ல மெல்லத் தலைவியை நெருங்கி அவள் நோய்க்குக் காரணம் என்னவென்று கேட்கின்றாள். எக்காரணமும் இல்லையென்று தலை மறுத்துக் கொண்டே வருகின்றாள். -

நிலைமை மோசமாகின்றது. பலருடனும் கலகல வென்று பழகிய தலைவி தனிமையையே விரும்பு கின்றாள். உயிர்த்தோழியுடன் கூட நெருங்கிப் பழகுவதை விரும்புவதாகத் தெரியவில்லை; என்றாலும் அவளுடைய உடல் இளைப்பு அதிகப் பட்டுக் கொண்டே போகிறது. உயிர்த்தோழிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பிற தோழி மார்களோடு கலந்தாலோசித்துப் பார்த்தாள், ஒன்றும் விளங்கவில்லை. இறுதியாக ஒருநாள் .

எவ்வாறாவது தலைவியின் மனோநிலையை அறிந்து கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தவளாக, தோழி அன்று தலைவியை நெருக்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/60&oldid=660027" இலிருந்து மீள்விக்கப்பட்டது