பக்கம்:புதிய கோணம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் , 71

உணர்த்துவான்வேண்டி குறிஞ்சிப் பாடலைப் பாடினார் என்று எழுத்ப்பட்டிருக்கிறது. தமிழர் களுடைய நாகரீகத்தின் சாரமாக இருக்கிறது அகத்திணை. அந்த அகத்திணையின் உயிர் நாடியாக இருப்பது குறிஞ்சித் திணை. அந்தக் குறிஞ்சித் திணையை, தமிழ்ப் பண்பாட்டை அறியாதவர்கள் யாரும் அறிந்துகொள்ள முடியாது. அது தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தது. எனவே, இந்தத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகிய தமிழர்களின் பண்பாட்டை அற்புதமாகக் குறிஞ்சிப் பாட்டின் மூலம் பாடி, அதனைக் கற்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களின் பண்பாட்டை அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்தார் கபிலர் பெருமான். எட்டுத்தொகையில் உள்ள அகநானூற்றில் 18 பாடல்களும்; புறநானூற்றில் 28 பாடல்களும்; நற்றிணையில் 20 பாடல்களும்; குறுந்தொகையில் 29 பாடல்களும், கலித்தொகையில் 29 பாடல்களும்; பதிற்றுப்பத்தில் 10 பாடல்களும்; ஐங்குறுநூற்றில் 100 பாடல்களும், ஆக 235 பாடல்கள் பாடியிருக்கிறார். பரிபாடல் என்று சொல்லப்பட்ட ஒரு நூல்தான் விடுபட்டது எட்டுத் தொகையில். ஆக எட்டுத் தொகை என்ற தொகுப்பு நூலில் 7 பகுதிகளில் அவருடைய பாடல்கள் அமைந்திருக்கின்றன என்றால், நினைத்து நினைத்து வியக்கக்கூடிய அளவுக்கு அது சிறப்புடையதாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/79&oldid=660047" இலிருந்து மீள்விக்கப்பட்டது