பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 அவர்களுக்கு உறையுளும் உணவும் விடுதி யில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக மாதம் முப்பத்து மூன்று மார்க்குகளே கட்ட வேண்டும். இப்பள்ளியில், மனமகிழ் செயல்மன்றங்கள் இருபத்திரெண்டு இயங்குகின்றன. எ ன .ே வ மாணவ வாழ்க்கை சலிப்பாயிராது. o மின்நிலைய நகர், லெபனுேஷ் நகரின் புறங்கர்; புது நகரும் ஆகும். பழைய லெபனேவ் சிறிது துரத்தில் இருக் கிறது. அதைச் சுற்றி ஸ்பிரி நதி ஓடுகிறது. அங்கதி, இப்பகுதியில் நூறு கிளைகளாகப் பிரிந்து வளைந்து நகர்கிறது. பனிக்காலத்தில், ஆற்றுநீர் உறைந்து கிடக்கும். வேனிற் காலத்தில் நீர் ஒடும். அப்போது கிளையாறுகளில் எண்ணற்ற சிறு சிறு உல்லாசப் படகுகளில், சுற்றி வந்து, மகிழ்வது, இந்தப் பக்கத்து மக்களின் வழக்கம். நாள்தோறும் நூற்றுக்கணக்கான வெளியூர்க்காரர். களும் இங்கு வந்து படகுச் சுற்றுலாவில் திளைப் பார்கள். எங்களுக்கும் அத்தகைய நற்பேறு கிட்டிற்று. காங்கள் அனைவரும் மோட்டார் படகொன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு, சுற்றுலா வங் தோம். இயற்கைக் காட்சி, மிக இனிமையான காட்சியாக விளங்கிற்று. சின்னஞ்சிறு பையன் கள் சிறு சிறு படகுகளை தாங்களே, பெரியவர்கள் இல்லாமல், துணிச்சலாக ஒட்டிச் செல்வதைக்