பக்கம்:புதிய தமிழகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 11

இந்நூல்களைப் பார்வையிடும் பாடக் குழுவினருள் பெரும்பாலோர் புலமையும், உலக அறிவும் படைத்த சான்ருேராய் இருத்தல் வேண்டும்.

முடிவுரை

முதிய தமிழகத்தில் சங்ககாலத் தமிழக வாழ் வு வாழி வசதி அமைத்தல் வேண்டும். இன்று தெரு மேடைகளிலும், ஒதுக்கிடங்களிலும் வாழுகின்ற தமிழர் கூட்டம் புதிய தமிழகத்தில் காணப்படலாகாது. ஒவ் வொரு தமிழனும் இருக்க வீடும், வாழ வழியும் பெற்றவ கை இருத்தல் வேண்டும். உண்டி, உடை, உறையுள் என்னும் மூன்றும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருத்தல் வேண்டும் இங்கனம் இருக்கச் செய்வது எல்லாத் தமிழ் மக்களின் பொதுக் கடமையாகும். அரசாங்கத்தின் சிறப்புக் கடமையாகும். உண்மைத் தமிழரான காம ராசர் ஆட்சியில் தமிழர் வாழ்வு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகச் சிறப்படையும் என்று நம்புதல் தவருகாது. அவரது ஆட்சி, கிலேபெற்றிருக் கத் தமிழர் அனைவரும் உள்ளக் கிளர்ச்சியோடு உழைப் பார்களாக அப்பொழுதுதான் எல்லா இன மக்களும் அரசாங்க அலுவல்களிலும் பிற துறைகளிலும் தத் தமக்குரிய இடத்தைப்பெற்றுப் பொருளாதாரத் துறை யில் கவலையின்றி வாழ முடியும்)

இதுகாறும் கூறப் பெற்றவை உருப்பெறுமாயின் புதிய தமிழகம் மெய்யாகவே நாட்டு மக்களுக்கு நலம் விளேப்பதாக விளங்கு மென்பதில் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/11&oldid=999951" இலிருந்து மீள்விக்கப்பட்டது