பக்கம்:புதிய தமிழகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர்

19



“கி. பி. 17-ஆம் நூற்ருண்டினிறுதி தொட்டுக் கூத்து நூல்கள் சில வேரற்று வீழ்ந்த நாடகத் தமிழி னின்றும் இளைப்பனவாயின. இடையிடையே கவிக் கூற்று மேவி, இழிசினர் நடக்கும் இயல்பினவாகிக் கூத்தும் பாட்டும் கொண்டு கடப்பனவெல்லாம் கூத்து நூல்களாம். சீகாழி அருணுசலக் கவிராயர் செய்த 'இராம நாடக மும், குமரகுருபர சுவாமிகள் செய்த 'மீனுட்சியம்மை குறமும், திரிகடராசப்பக கவிராயர் செய்த குற்ருலக் குறவஞ்சியும் இக் கூத்து நூலின் பாற் படுவனவாம். முக்கூடற் பள்ளு, பருளே விநாய கர் பள்ளு முதலியனவும் கூத்து நூல்களேயாம். இவை யெல்லாம் இயற்றமிழ்ப் புலமை சான்ற பாவலர் இயற்றினவாம். சுத்தாநந்தப் பிரகாசம் என்றதோர் பரத நூல் இடைக் காலத்தின் தொடக்கத்தில் ஏற்பட் டது வெளிப்படாமல் இருக்கின்றது. பின்னர்க் கி. பி. 16-ஆம் நூற்றண்டின் தொடக்கத்திலிருந்த அாபத்த நாவலர் என்பாய் பாதசாஸ்திரம் என்ற தோர் நூல் செய்துள்ளார்.';

19-ஆம் நூற்றண்டின் முற்பாதியில் கொட்டை பூர்ச்சிவக்கொழுந்து தேசிகர் தஞ்சையை ஆண்ட சா போஜி மன்னர் மீது பாடிய குறவஞ்சி நாடகம் குறிப் பிடத்தக்கது. அந் நாடகம் தஞ்சைப்பெரிய கோவிலில் நடிக்கப்பட்டு வந்தது. அதே நாற்ருண்டின் கடைப் பகுதியில் பேராசிரியர் சுந்தாம் (பிள்ளை) பாடிய மனுேன் மணிய நாடகமும் போற்றத்தக்கதாகும்.

! வி. கோ. கு. தமிழ் மொழியின் வரலாறு. பக்-46-47.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/19&oldid=641891" இலிருந்து மீள்விக்கப்பட்டது