பக்கம்:புதிய தமிழகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனும் 25

குப் பிறகு இக் குமரியாறு பாயப்பெற்ற நிலப்பகுதியும் கடலுள் அமிழ்ந்தது. இலங்கையில் உண்டான இரண் டாம் கடல் கோள் கி. மு. 504ல் நிகழ்ந்தது என்றும் அக் கடல் கோளால் இலங்கையின் பெரும் பகுதி அழிந்தது என்றும் இலங்கை வரலாறு கூறுகிறது. குமரியாறு கடலால் கொள்ளப்படுவதற்கு முன் தொல் காப்பியம் செய்யப்பட்டது என்பது அறிஞர் கருத்து. இக் கடல்கோளால் இரண்டாம் தமிழ்ச் சங்கம் நிகழ்ந்த அலேவாய் (கபாடபுரம்) என்னும் ககரம் அழிந்தது என் பது கூறப்படுகிறது.

இந்த இரண்டு கடல் கோள்களுக்குப் பிறகு மதுரை பாண்டியர் தலைநகரமாயிற்று. அப்பொழுது இன்றுள்ள குமரி முனை தமிழகத்தின் தெற்கெல்லே யாகக் கொள்ளப்பட்டது. இக்காலம் கடைச்சங்க காலம் என்று அறிஞர் கூறுவர். முதற் கடல் கோள் காலம் முதற் சங்க காலம் என்றும் இரண்டாம் க ட ல் .ே கா ஸ் காலம் இடைச் சங்க காலம் என்ன்ம் கூறுவர்.

புதிய மேற்கு எல்லை.

இம் மூன்று காலங்களிலும் வேங்கடமே தமிழகத் தின் வட எல்லேயாகக் குறிக்கப்பட்டுள்ளது. கிழக்கி லும் மேற்கிலும் கடலே எல்லேயாகக் கூறப்பட்டுள் ளது. இதனுல் பன்னெடுங்கால முதலேதொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே-வேங்கடம் தமிழகத்தின் வட எல்லேயாகவும் கிழக்கிலும் மேற்கிலும் கடல் எல்லே யாகவும் தெற்கே முதலில் நாடு இருந்தது - பின்பு கடல் எல்லையாக மாறியது என்னும் உண்மைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/25&oldid=641897" இலிருந்து மீள்விக்கப்பட்டது