பக்கம்:புதிய தமிழகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 31

கூறிக்கொண்டு என் மீது போருக்கு வருகின்றனர். இங்ஙனம் வரும் ப ைக வ ைரயான் வெல்லேனுயின்

1. என் குடை கிழலில் வாழும் குடி மக்கள் கிற்க நிழல் காணுமல் எங்கள் அரசன் கொடியவன்' என்று கூறிக் கண்ணிர் சிந்திப் பழி துாற்றும் கொடுங்கோல் மன்னன் ஆகக்கடவேன்;

2. கல்வி, கேள்வி, ஒழுக்கம் இவற்றிற் சிறந்த மாங்குடி மருதனத் தலைவனுகக் கொண்ட புலவர் கூட் டம் எனது பாண்டிய நாட்டைப் பாடாதொழிவதாக

8. வறியவர்க்குக் கொடுக்க முடியாத நிலையில்

யான் வறுமையை அடைவேகை”,

என்று மதுரை மன்னன் நெடுஞ்செழியன் சூள் உரைத்தான். இச் சூளுரையிலிருந்து நாம் அறியும்

உண்மைகள் யாவை?

1. குடிகளுக்கு கிழலே அருளி அவர் மனம் மகிழ ஆட்சி புரிபவனே செங்கோல் அரசன்;

2. கல்வி, கேள்வி, ஒழுக்கங்களிற் சிறந்த புலவர் பெருமக்களது பாராட்டுப்பெறுதலே காவலன் கடமை. (செங்கோல் அரசனையே ஒழுக்கம் மிகுந்த சான்றேர் பாராட்டுவர்)

3. இல்லை என்று இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லாத செல்வ கிலேயும், மன்நிலையும் அரசனுக்கு இருத்தல் வேண்டும்-என்னும் மூன்று உண்மைகளும் இச் சூளுரையி லிருந்து தெளிவாகத் தெரிகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/31&oldid=641903" இலிருந்து மீள்விக்கப்பட்டது