பக்கம்:புதிய தமிழகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புதிய தமிழகம்

சோழன் நலங்கிள்ளி

இன்றைய தஞ்சை, திருச்சி மாவட்டங்களும், தென் ற்ைகாடு மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் காலுகாவும் சங்க காலத்தில் சோழ நாடாக இருந்தன. இ த னே ஆண்ட முடிமன்னர் பலர். அவருள் கவி பாடும் ஆற் றல் பெற்ற காவலர் சிலரே. அச்சிலருள்ளும் போர்க் திறனினும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கியவன் கலங் கிள்ளி என்பவன். ஒருமுறை அவன்மீது பகைவர் படையெடுத்தனர். அதுகேட்டுச் சினந்த அப் பெரு மகன்,

  • இப் பகைவர் என்னே வணங்கி, எமக்கு கினது காட்டைத் தர வேண்டும் என்று வேண்டுவாராயின், மனமகிழ்ச்சியோடு கொடுத்து விடுவேன். அங்கனம் பணிவோடு வராமல் படைச் செருக்குடன் வருவதால், இவர்களே எதிர்த்துப் பொருதலே முறை. இவர்களே நான் வெல்லேனுயின், பொதுப் பெண்டிரது சேர்க்கை யில் எனது மாலே துவள்வதாக, " என்று சூளுரை. புகன்ருன் * -

இச் சூளுரையால் இவனைப்பற்றி நாம் அறிவன

யாவை? -

1. வலிமை மிகுந்த இப்பேரரசன் அடியவர்க்கு எளியவன்-பணிவாரிடம் பண்புடன் கடப்பவன் என் மதும்; -

2. பொதுமகளிர்து சேர்க்கையை விரும்பாதவன் பொதுமகளிரைச் சேர்தல் வெறுக்கத் தக்கது என்ற கருத்துடையவன் என்பதும் நன்கு தெளிவாகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/32&oldid=641904" இலிருந்து மீள்விக்கப்பட்டது