பக்கம்:புதிய தமிழகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 9

யாகும். நன்முறையி லமைந்த கட்டிடங்கள், அறிவு வளர்ச்சிக் கேற்ற நூல் நிலையங்கள், சமுதாய அறிவை யும் உலக அறிவையும் ஊட்டும் பலதிறப்பட்ட செய்திக் காள்கள், விளையாட்டு வெளிகள் முதலியவை புலவர் வகுப்பு மாணவர்க்கு இன்றியமையாதவை. இன்று இந் நலங்களெல்லாம் குறைந்துள்ளன. இவையனைத்தையும் விட வெட்கப்படத் தக்கது, இப்பரந்துபட்ட தமிழ் நாட்டில் பெண்க ளுக்கென்று தனிப்பட்ட புலவர் கல்லூரி இல்லாமையே. இதைப் பற்றிக் கவலைப்படுவார் ஒருவருமில்லை. பெண் கல்வி வளர்ந்துவரும் இக்காலத்தில்-பெண்களுக்கு உயர் நிலைப் பள்ளிகள் பெருகிவரும் இக்காலத்தில்-பெண் புலவர்களைத் தயாரிக்கும் கல்லுரி ஒன்று இல்லையென் பது வருந்தத் தக்கதொன்று. நமது நாட்டு அரசாங்கம் அடுத்த ஆண்டிலேனும் பெண்களுக்கென்று புலவர் கல்லூரிகளைச் சென்னையிலும், திருச்சிராப்பள்ளியிலும், மதுரையிலும், கோவையிலும், திருநெல்வேலியிலும் வைத்த்ல் நலமாகும். -

தமிழக வரலாறு

அழிந்து போன கொற்கை, காவிரிப்பூம்பட்டினம், உறையூர், பழையாறை முதலிய இடங்களை அகழ்ந்து ஆய்வுகள் நடத்திச் சங்ககால வரலாற்றைச் செப்பனிடு தல் வேண்டும். நடுகிலே ஆராய்ச்சியி விருந்து பிறழ்ந்து எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களே ஒழித்துத் தென் ட்ைடு வரலாற்றைச் சாத்திரீயமுறையில் எழுதி வெளிப் படுத்துதல் வேண்டும். தமிழில் அவ்வப்போது வளர்ச் சிக்குள்ள வகையில் அரசாங்கத்திற்கு யோசினேகள் கூற உண்மைத் தமிழ்ப் பற்றுடைய புலவர் பெருமக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/9&oldid=999959" இலிருந்து மீள்விக்கப்பட்டது