பக்கம்:புதிய பார்வை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 புதிய பார்வை

நிகழ்ச்சிகளில் பொதுக்கூட்டங்களும், சொற்பொழிவுகளும் கூட முக்கியமானவையாகி விட்டன. சொற்பொழிவாளர் கள் என்ன பேசப் போகிருர்கள் என்பதைக் கேட்க நேர மின்றி அடுத்த கூட்டத்துக்குப் பறந்துகொண்டு ஒடும் அவசரத் தலைவர்கள், தலைவர் உரையை முழுவதும் கேட்கிற அளவுக்கு முன்கூட்டியே வர முடியாமல் தாம் பேசவேண்டிய நேரத்துக்கு மட்டுமே ஓடிவர முடிந்த அவசரச் சொற்பொழிவாளர்கள்.

பொதுக்கூட்டங்களில் உறுதியான கற்பலன் கூட்டங் களே ஏற்பாடு செய்கிறவர்கள் தலைவருக்கும் பேச்சாளருக் கும் அணிவது மாலையாகத்தான் இருக்கும் என்பது. உறுதி சொல்லமுடியாத பலன் கூட்டத்தில் இருந்து கேட்பவர்கள் என்ன தருவார்கள் என்பது. கைதட்டல் (தொடர வேணும் என்ற அர்த்தத்திலும் இருக்கலாம்-முடிக்க வேனும் என்ற அர்த்தத்திலும் இருக்கலாம்) கல் தட்டல், விசில், ஆய், ஊய், எது வேண்டுமானலும் கேட்பவர்களிட மிருந்து பேசுகிறவனுக்குக் கிடைக்கலாம். பேசுவதற்குச் சாமர்த்தியம் இல்லை என்ருலும் கேட்கிறவர்கள் தன்னே என்ன செய்யச் சொல்லிக் கையைத் தட்டுகிரு.ர்கள் என் பதைப் புரிந்து கொள்வதற்காகவாவது ஒரு பேச்சாள னுக்குச் சாமார்த்தியம் வேணும். கைதட்டலின் தொனி நோக்கி அங்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம். சிலர் ஆரம்பித்த பேச்சை எப்போது முடிப்பது என்று தெரி யாமல் வளர்த்துக்கொண்டே தவித்தும், கேட்பவர்களைத் தவிக்கச் செய்தும் வேதனைப்படுவது போல் மற்றும் சிலர் ஆரம்பித்துவிட்ட பேச்சை எப்படி முடிப்பது என்று தெரியாமல் வளர்த்துக்கொண்டே முடிவு தெரிகிறவரை தடுமாறிப் பேச்சைக் குழப்பிக் கொண்டிருப்பார்கள். சிலர் கூட்டம் முடிகிற சமயத்தில் நன்றியுரை கூறுகிறபோது இப்படி முடிக்கத் தெரியாமல் தவித்துத் தவித்து நன்றி யைக் கூறிக்கொண்டே இருப்பதுண்டு. சிக்கல் விழுங்து விட்ட நூல் கற்றையைப் போல் மறு துணி தெரியாமல் வழ வழவென்று போய்க்கொண்டே இருக்கும் இங்தப் பேச்சு. இப்படி முடிவில்லாத நன்றியை இந்த மனித ஆசாபாசங்கள் விறைந்த உலகில் அடைவது அரிதென் குலும்-அது பொருத்தமான இடத்தில் முடியுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/156&oldid=598260" இலிருந்து மீள்விக்கப்பட்டது