பக்கம்:புதிய பார்வை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I32 புதிய பார்வை

சுதந்திரமான ரூபலாவண்யத்தை முதன்முதலாக நிரூபித்த வன் கம்பன். முடிவாகவும், கிறைவாகவும், முற் றகவும் நிரூபித்தவன் பாரதி அதற்கு முக்திய தமிழில் செய்யுளும் நூற்பாவும்தான் அதிகம். கம்பனுக்கும் பாரதிக்கும் பின்பே தமிழிலே கவிதை என்ற ரம்யமான சொல்லுக்கு லகுவான இலட்சணங்கள் பிறந்தன. சில அபூர்வ லாவண்யங்களே இலட்சியங்களிலிருந்துதான் கண்டுபிடித்துச் சொல்ல முடி யுமே ஒழிய இலட்சணங்களில் வரையறுக்க முடியாது. கவிதையும் அப்படிப்பட்ட ஒன்று. தமிழில் முன்னரே வகுக்கப்பட்ட இலட்சணங்களுக்கு மட்டும் கட்டுப்ப்ட்டவை என்ற ஒரே தகுதியை உடைய யாவும் செய்யுட்களே. இலட் சணங்களிலும் மீருமல் அப்பாற்பட்ட பல வனப்புக்களே பும் இணைத்துக் கொண்டு பிறந்தவைதான் கவிதைகள். இலட்சணங்கள் மாறக் கூடியவை. இலட்சணங்களாக விதிக்கப்பட்ட அழகுகள் மாறும் அழியும். ஆல்ை இலட்சியங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட அழகுகள் அப்படி மாறமாட்டா, வடிவங்களும் (Form) சொல்லும் முறைகளும் (Expression) கிலேயானவை அல்ல. காலதேச வர்த்தமானங்களில் நிச்சயமாக மாறக்கூடியவை. ஒரு காலத்தில் மிகக் கடுமையாக இலட்சணங்கள் வகுக்கப்பட்ட சில பாடல் வகைகளே இப்போது தமிழில் இல்லை என்ப தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். மருட்பா, பரிபாடல், சவல்ே வெண்பா, பஃருெடை வெண்பா, சிங்தியல் வெண்பா வஞ்சிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, சுரி தகம், தரவு, கொச்சகக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை போன்ற செய்யுட்களும், செய்யுளினங்களும், செய்யுளுறுப் புக்களும், இன்று பழைய இலக்கணங்களிலும், பண்டிதர் கள் வகுப்புக்களில் கடத்தும் பாடங்களிலும், தவிர வழக் கொழிந்துவிட்டன என்று சொன்னல் தவறில்லை. முன்பே பலர் பாடி வைத்துள்ளவை தவிர இன்று இவைகளைத் தேடித் துருவி இயற்றிப் பாடுவாரில்லை. கிறைவானதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/34&oldid=598012" இலிருந்து மீள்விக்கப்பட்டது