பக்கம்:புதிய பார்வை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 87.

சொல்லும் சரியாக அமைந்த முழு வாக்கியமாம். இருக் கிறீர்கள்-என்பது அணுவசியமான சொல். அருகில் என்ற பதமே பக்கத்தில் எனப் பொருள்படும். அருகாமை என்ருல் தொலைவு. பிற மொழியிலிருந்து தனிச்சொற்களே அமைத்தலும், பயன்படுத்தலும் ஏற்றதாக இருப்பினும் பரீட்சார்த்தம் உத்தேசபூர்வம்-போன்று இருமொழி இணைந்து பிரியாது ஒரு தொடராப் கிற்கும் பிறமொழிச் சொற்ருெடர்களைப் பயன்படுத்துவது நல்லதாகாது.

இன்னும் அழகுக்காவது சில சொற்களுக்குப் பக்கத் தில், சில சொற்கள் உடன் தொடராமல் தவிர்க்க வேண் டும். அப் பொருள் இப் பொருளே விடச் சிறிது பெரிது; இந்த வாக்கியத்தில் சிறிது பெரிது’ என்ற முடிப்பில் இரண்டு சொற்களும் ஒன்ருேடொன்று. இணேயத் தயங்கி இணங்காமல் விட்டிசைத்து நிற்பது தெரியவில்லேயா ? சற் அறுப் பெரிது என்ருே சற்றே பெரிது என்ருே இருந்தால் அழகாகப் பொருங்தும்.

அப்படிச் செய்யாமற் போயிருந்தால் கன் ருக இல்லா மலிருந்திருக்கும்’-என்று ஒரு வாக்கியம். இதில் முன்னும் பின்னும் சொற்கள் அழகாகச் சேரவில்லை. செய்யாமற் போ யிருங் கால்-இல்லாமலிருந்திருக்கும். -- இரண்டு இடங்களிலுமே வார்த்தைகள் ஒட்டாமல் கலிங்து அழகு குன்றி முரண்பட்டு ஒலிக்கின்றன. இல்லாமலிருந்திருக் கும்; இருந்திராது-என்ற தொடர்களில் உடன்பாடும், எதிர் மறையும் அருகருகே கின்று தண்ணிரும்-எண்ணெ யும் போல ஒட்டாமலிருக்கின்றன.

'திருட்டுக்காகத்தான் திருடன் திருடுகிருன் என்பது சரியல்ல. ஒரே சொல் திரும்ப வருவது செய்யுளில் அணி. வசன கடையில் பொருளின் மந்தகதிக்கு அதுவே காரணம். அவனவன் அவனவனுடைய காரியத்தை அவனவன் பாட்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/89&oldid=598126" இலிருந்து மீள்விக்கப்பட்டது