பக்கம்:புதிய பார்வை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 39

வேற்பு' என்ருே 'விசேட வரவேற்பு' என்ருே அர்த்த பாவம் மட்டும் விளங்குமாறு மொழிபெயர்ப்பது பயனளிக் குமா என்று சிந்திக்க வேண்டும். அதே போல் Fishing in troubled water என்பதைக் 'குழப்பத்தில் மீன் பிடித்தல்” என மொழி பெயர்க்கலாமே ஒழிய கஷ்டப்பட்ட நீரில் மீன் பிடித்தல்' என மொழி பெயர்க்க முடியாது.

உலகின் பெரும்பாலான மொழிகளிலிருந்து தமிழுக்கு நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. சில மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது கடினமாக வும், இன்னும் சில மொழிகளிலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பது சுலபமாகவும் இருக்கிறது. திராவிட மொழி இனங்களில் எதிலிருந்தும் (மலையாளத்திலிருந்தோ, கன் டைத்திலிருந்தோ, தெலுங்கிலிருந்தோ) தமிழில் மிகமிகச் சுலபமான மொழிபெயர்ப்புச் சாத்தியமாகிறது. இதற்குச் சான்று மேற்படி திராவிட மொழி இனங்களிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பாகி வந்திருக்கும் சிறுகதைகளும், காவல்களுமேயாகும். சூழ்நிலையாலும் மொழி, இன அடிப் படையாலும், இந்த மொழிகளிலிருந்து தமிழுக்கு வங்திருக் கும் பெரும்பாலான நூல்கள் வெற்றியடைந்துள்ளன. அடுத்து இங்திய மொழிகளில் மராத்தி, வங்காளி, இரண்டி லிருந்தும் தமிழுக்கு ஏராளமான சிறுகதைகளும் காவல் களும் வங்துள்ளன. காண்டேகரும் சரத்சங்திரரும், பங்கிம் சந்திரரும், தாகூரும், தாராசங்கரும் தமிழிலேயே எழுதி அளித்த அசல் ஆசிரியர்களைப் போலவே தமிழ் மக்களுக்கு அறிமுகமாகியுள்ளனர். இந்தியிலிருந்து பிரேம் சந்த், சுதர்சன், பகவதி சாண்வர்மா, சியா ராம் சரண் குப்தா. முதலியோரும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளனர் என்ருலும் நெருக்கமாக அறிமுகமாகியுள்ள வட இந்திய மொழியாசிரி யர்கள் என்ற முறையில் மராத்தி ஆசிரியர்களுக்கும், வங் காளி இலக்கிய கர்த்தாக்களுக்குமே முதல் பரிசு கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/91&oldid=598130" இலிருந்து மீள்விக்கப்பட்டது