பக்கம்:புதிய பார்வை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகமும் சூரியனும்

திமிழ் இலக்கியங்கள் வியந்தும் போற்றியும் பாடிப் பரவசப்பட்ட பெரும் பொருள்களில் ஞாயிறும் ஒன்று. சூரியனின் சிறப்பையும், சந்திரனின் சோபையையும் போற்றி வியக்து பாடுவது எல்லா காட்டிலும், எல்லா மொழியிலும் கவிகளின் பொது வழக்கம் என்ருலும் தமிழில் கதிரவனே வியந்து வணங்கும் பாடல்கள் பழமை யிலும் சரி, புதுமையிலும் சரி, நிறைய இருக்கின்றன. சிறப்பாகவும் இருக்கின்றன. தமிழில் இப்போது கிடைக் கும் மிகப் பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத் தில், பால்வரை தெய்வம், வினே, பூதம் முதலியவற்றுக்குத் திணை முடிவு கூறும் சூத்திரத்தில்,

'காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினேயே பூதம் ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம் ஆயீரைக் தொடு பிறவும் அன்ன ஆவயின் வரூஉங்கிளவி எல்லாம் பால்பிரிங் திசையா உயர்தினை மேன'

(தொல், சொல். 57)

என்று ஞாயிறு பற்றிய வழிபாட்டுக் குறிப்பு வருகிறது. இச் சூத்திர உறையில் சேருவரையர் வினையை அறத் தெய்வம் என்றும், சொல்லென்பது நாமகளாகிய தெய்வம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/95&oldid=598138" இலிருந்து மீள்விக்கப்பட்டது