பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2I ஆயினும் அதன் மக்கள் மட்டும் ஏழைகளா யிருக்கின் றனர். இந்தியாவின் செல்வம்தான் வெளி மா' களில் பல கூட்டத்தினர் இங்கே வருவதற்கு ஆசை காட்டியது. சரித்திரத்தின் ஆரம்பக் காலம் முதல் ஆசியா வின் மேட்டு நிலங்களிலிருந்து எண்ணற்ற மக்கள் இந்தியாவின் சமவெளிகளுக்கு வந்துள்ளனர்; அவர் களிலே சிலர் வெற்றி வீரர்கள், பலர் குடியேற வந்தவர் களும், யாத்திரிகர்களும், மாணவர்களும் ஆவர். இந்திய வாழ்க்கையும், கலாசாரமும், கலைகளும் அவர் களால் பாதிக்கப்பெற்றன; ஆயினும், எக்காலத்தி லும், வந்தவர்களை யெல்லாம் இந்தியா தன் பூர்விக மக்களுடன் இரண்டறக் கலக்கும்படி செய்து கொண் டது. இத்தகைய வெளித் தொடர்புகளால் இந்தியா வும் மாறுதலடைந்து வந்தது. எனினும் அது பெரும் பாலும் தன் பழைய இயல்பை அப்படியே பெற்றிருந் தது. ஆயிரம் ஆறுகளைக் கடல் தனக்குத் திறை யாக ஏற்றுக்கொள்வதுபோல, அது வெளியார்களே ஏற்றுக்கொண்டது. இதல்ை அடிக்கடி அதற்குச் சலனங்கள் ஏற்பட்டிருப்பினும், கடலின் நீர்மீது புயல் கள் வீசிய போதிலும், கடல் கடலாகவே இருப்பது போல், இந்தியா இந்தியாவாகவே இருந்து வந்தது. இந்திய காட்டின் பின்னணியும் ஐக்கியமும் முக்கிய மாகக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டவை. குறுகிய பொருளில் அவைகளை மத சம்பந்தமானவை என்று சொல்ல முடியாது. அந்தக் கலாசாரம் வெளியி லுள்ளவைகளை வெறுத்து ஒதுக்குவதாகவோ, சகிப்புத் தன்மையற்றதாகவோ இருக்கவில்லை; கிடைத்ததை வரவேற்றுத் தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் இயல்பு அதற்கு உண்டு. அதைப் புயல்களால் அசைக்க முடியாது. அந்தக் கலாசாரம், தன் சொந்த