பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3OO முறுத்தியும், பணம் பறித்தும் வெற்றியடைய முடியும் என்று எவனவது ஒருவன் கம்ப முடியுமா ? எங்கள் மக்களின் ஆதரவிலும், எங்கள் காட்டவரின் நல்லெண் னத்திலுமே எங்களுக்கு வலிமை உண்டாகின்றது என்பதை உலகம் முழுதும் அறியும். பழங் காலத்துப் பலாத்தாரமும் கட்டாயப்படுத்தலும் எங்களுடைய ஆயுதங்களில்லை. எங்கள் பெருந் தலைவர் எங்கள் கரங்களில் அளித்துள்ள ஆயுங்கள் அன்பும் தியாகமு மாம். துன்பத்தை காங்களே ஏற்றுக் கொண்டு, எங்கள் துயரத்தால் எதிரியின் மனத்தை காங்கள் மாற்றுகிருேம். 'கிரிமினல் முறையில் பயமுறுத்துதல் என்றல், ஒரு நபருக்கோ சொத்துக்கோ சேதமுண்டாக்குவதா கப் பயமுறுத்தலாகும். சேதம் என்பது "சட்ட விரோதமாக’க் கெடுதல் செய்வதாகும். பணம் பறித்தல் என்பது ஒரு நபருக்குச் சேதம் விளைப்பதாக அச்சுறுத்தி, அதன் மூலம் "நேர்மையற்ற முறையில் அவர் சொத்தைப் பறிப்பதாகும். சர்க்கார் தரப்புச் சாட்சியத்தை நான் கவனமாகக் கேட்டு வந்தேன். இந்த அதிசயமான குற்றச்சாட்டுகள் என்ன ஆதாரத் தின் மேல் சாட்டப் பெற்றுள்ளன என்பதைக் கண்டு பிடிப்பதற்காகவே அவ்வாறு கேட்டு வந்தேன். எந்த கபருக்கு அல்லது சொத்துக்குச் சேதம் விளைப்பதா கப் பயமுறுத்தப்பட்டது ? 'சட்ட விரோதமாக' என்ன கெடுதல் செய்யப்பட்டது? எங்களில் எவரும் நேர்மையற்ற முறையில் கடந்ததாக எதிலிருந்து தெரிகிறது? நாங்கள் எந்த நபருக்கோ சொத்துக்கோ சேதம் விளைத்ததாக இதுவரை கேட்ட சாட்சியத்தில் எதுவும் கூறப்படவுமில்லை, கிருபிக்கப்படவுமில்லை; அது போலத்தான் சட்ட விரோதமாகக் கெடுதல் செய்ததாகவும், நேர்மையற்ற முறையில் கடந்ததாக