பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 வேறு ஒரு வேலையும் செய்கிறர்கள். தங்களுடைய பயங்கரச் செயல்களைப் பரிசுத்தமான, புனிதமான ஒரு போர்வையால் முடி மறைக்கவும் முயலுகின்றனர். வெளியில் தெரிந்து விடுமே என்று அஞ்சி, இவர்கள் உண்மையை அடக்கிவைக்க ஒவ்வொரு வழியிலும் முயற்சி செய்துள்ளனர். தெய்வங்கள் எவர்களை அழிக்க விரும்புகின்றனவோ அவர்களுக்கு முதலில் பயித்தியம் பிடிக்கச் செய்துவிடும். சென்ற ஏழு மாதங் களாக இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்துள்ள வெறிபிடித்த செயல்கள் யாவும் ஆட்சி உடைந்து சிதறி விழப் போவதற்குக கண் முன்பு தெரியும் அறிகுறிக ளாகும். இவை உடைந்து விழுந்து கொண்டிருக்கும் ஒர் ஏகாதிபத்தியம் கண் த2ல தெரியாமல் கடைசி யாகச் செய்யும் தந்திரங்களாகும். "...இந்த ஏகாதிபத்தியத்திற்கோ இங்கிலாக் துக்கோ காங்கள் விசுவாசும் காட்ட முடியாது. இந்தி யாவில் இங்கிலாந்தின் கொடி இருப்பதே ஒவ்வோர் இந்தியனுக்கும் அவமானமாகும். இன்றுள்ள பிரிட் டிஷ் அரசாங்கம் எங்களுக்குப் பகைவர்களின் அரசாங் கமாகும், அதிகாரத்தைக் கபடமாகக் கைப்பற்றிக் கொண்ட அங்ாகியரின் வல்லரசாகும். இங்கே படை வலிமை ஒன்றைக் கொண்டே அது உயிர் வாழ்கின் றது. எனது விசுவாசம் எல்லாம் இந்திய மக்களிடம் தான், எந்த அரசருக்கோ, அந்ாகிய அரசாங்கத் திற்கோ அல்ல. நான் இந்திய மக்களின் ஊழியன், கான் எவரையும் யசமானராக ஏற்றுக் கொள்வ தில்லை. ‘எங்களுடைய போராட்டத்தின் இறுதிக் கட்டம் கெருங்கிக் கொண்டிருக்கின்றது. பிரிட்டிஷ் ஏகாதி பத்தியமும், மற்ற பழைய ஏகாதிபத்தியங்கள் எல்லாம் மாண்டொழிந்தது போலவே, போகப் போகின்றது.